Day | Morning | Evening |
---|---|---|
Monday - Sunday | 6:00 AM – 12:00 PM | 5:00 PM – 7:30 PM |
இத்திருத்தலம், சுமார் 1300 ஆண்டுகளுக்கு முந்தையது என கணிக்கப்படுகிறது.
இது தமிழகத்தில் உள்ள ஒரு புனித
சிவஸ்தலமாகும்.
பொருப்பள்ளி வரைவில்லாப் புரமூன் றெய்து
புலந்தழிய சலந்தரனைப் பிளந்தான் பொற்சக்
கரப்பள்ளி திருக்காட்டுப் பள்ளி கள்ளார்
கமழ்கொல்லி யறைப்பள்ளி கலவஞ் சாரற்
செழுநனி பள்ளிதவப் பள்ளி சீரார்
பரப்பள்ளி யென்றென்று பகர்வோ ரெல்லாம்
பரலோகத் தினிதாகப் பாலிப் பாரே. - திருநாவுக்கரசர்
சைவ சமயக்குறவர்களில் ஒருவரான திருநாவுக்கரசர் பெருமானால் பாடல் பெற்ற வைப்புத்தலங்களில் இத்தலம் 'பரப்பள்ளி' எனப் பாடல் பெற்றது. பாடலின் பொருள் "இத்தலத்தில் சுயம்புமூர்த்தியாக எழுந்தருளியுள்ள சிவபெருமானை வழிபடுபவர்கள் அனைத்து துன்பங்களிலிருந்தும் விடுபட்டு இம்மைப் பயன்களை எய்துவர் என்பது திண்ணம்" என்பதாகும்.
மூலவர் : நட்டூர் நாதர், நட்டூர் அமர்ந்த நாயனார், மத்திய புரீஸ்வரர் (வடமொழி)
இறைவி : மட்டுவார் குழலி, நறுமணமுடையாள், சுகந்த குந்தலாம்பிகை.
தல விருட்சம் : பவள மல்லி மரம்
"பழங்சேபளி" என்ற ஊரில் சைவம், வைணவம், சமணம் ஆகிய மூன்றும் தழைத்து வளர்ந்திருந்தன. இந்த ஊரில் சமணப்பள்ளி இயங்கி வந்ததாகவும், இதனை உறுதிப்படுத்தும் கல்வெட்டு ஒன்று 1038 ஆம் ஆண்டைச் சேர்ந்ததாகவும் உள்ளது. இந்த கல்வெட்டு 1004 முதல் 1047 வரை ஆண்ட முதலாம் விக்ரம சோழன் காலத்தைச் சேர்ந்ததாகும். அதில் அவரது தந்தை கோகலி மூர்க்கன் என்பவர் பெயரும் காணப்படுகிறது. வட்டெழுத்தில் எழுதப்பட்ட இந்த கல்வெட்டில் 17 வரிகள் மட்டுமே கிடைத்துள்ளன."
1257 ஆம் ஆண்டைச் சேர்ந்த கல்வெட்டின் பதிவின்படி, இரண்டாம் விக்கிரம சோழன் பரன்சேர் பள்ளி என்ற ஊரில் உள்ள உலவறையில் ஒரு குளத்தை வெட்டினார். அந்தக் கல்வெட்டில், நான்கு எல்லைகளுக்குள் உள்ள நன்செய் மற்றும் புன்செய் நிலங்கள் தானமாக வழங்கப்பட்டதையும் குறிப்பிடப்பட்டுள்ளது.
1261 ஆம் ஆண்டைச் சேர்ந்த கல்வெட்டின்படி, இரண்டாம் விக்கிரம சோழன் பரன்சேர் பள்ளி என்ற ஊரில் அமைந்திருந்த இறைவன் "நட்டுர் அமைந்த நாயனார்" மற்றும் இறைவி "மட்டுவார் குழலி" என்று உள்ளது மற்றும் திருவிழாக்கள் நடைபெற ஏற்பாடாக தானங்கள் வழங்கியுள்ளார்.
சிவன் சன்னதி முழுவதும் பிரித்து பின்னர் சேர்த்து புதிய விமானம் மற்றும் தரைத்தளம் அமைத்தல். அம்பாள் சன்னதி முழுவதும் பிரித்து பின்னர் சேர்த்து புதிய விமானம் மற்றும் தரைத்தளம் அமைத்தல். பெருமாள் சன்னதி முழுவதும் பிரித்து பின்னர் சேர்த்து புதிய விமானம் மற்றும் தரைத்தளம் அமைத்தல். தட்சிணாமூர்த்தி, சண்டிகேஸ்வரர், பைரவர் சன்னதிகள் முழுவதுமாக புனரமைத்தல். பாலமுருகன் சன்னதி முன்மண்டபத்துடன் முழுவதும் புனரமைத்தல். ஆறுகுல விநாயகர் சன்னதிகள் புனரமைத்தல், மடப்பள்ளி புதியதாகக் கட்டுதல். சிவன் மற்றும் பெருமாள் கோவில் விளக்குத்துாண்கள் பிரித்து சேர்த்து சுதைகளுடன் வர்ணம் பூசுதல். பெருமாள் கோவிலில் புதியதாக ஆஞ்சநேயர் மற்றும் கருடாழ்வார் சன்னதிகள் நிர்மானித்தல். கன்னிமூல கணபதி சன்னதி புனரமைத்தல். சிவன் கோவில் கிணற்றுக்கு சுற்றுச்சுவர் கட்டுதல். பிரகாரம் முழுவதும் கற்தளம் அமைத்தல். தண்ணீர் மற்றும் விளக்கு வசதிகள் செய்தல். அரசமர விநாயகர் சன்னதி புதுப்பித்தல்.திருமதில்சுவர் பழைய பூச்சை நீக்கி மராமத்து செய்து சுதைகளுடன் வர்ணம் பூசுதல். நாகர் சன்னதிகள் புனரமைத்தல். இத்திருப்பணி முழுவதும் உபயதாரர்கள் திருப்பணிகளாக நடைபெறுவதால் ஆறுகுல பெருமக்களும் பரஞ்சேர்வழி கிராம பொதுமக்களும் இத்திருப்பணியில் தனித்தனியாகவோ அல்லது ஊர் வாரியாகவோ அல்லது குழுக்களாகவோ ஒவ்வொரு திருப்பணியையும் ஏற்று தாங்களாகவோ பூர்த்தி செய்து கொடுக்கலாம் என்றும் அல்லது இயன்றளவு பொருட்களாகவோ அல்லது நிதியுதவியோ செய்து திருப்பணி சிறப்பாக நடைபெற்று விரைவில் குடமுழுக்கு நடைபெற தங்களால் முடிந்த உதவிகளை மனமுவந்து செய்து இறையருள் பெற்றுய்யுமாறு அன்புடன் வேண்டுகிறோம்.
Name:து.தங்கமுத்து ADSP (R)
Position:அறங்காவலர் மற்றும் திருப்பணிக்குழுத் தலைவர்.
Phone: +91 99441 88881
Name:சி.முத்துசாமி
Position:அறங்காவலர்
Phone: +91 90037 03666
Name: திருப்பணி அலுவலகம்
Phone: +91 90807 03900